வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.
அமைச்சரவை தீர்மானங்கள் பின்வருமாறு,
கொழும்பு துறைமுக நகரத்தின் அபிவிருத்தி வேலைத்திட்ட மேற் பார்வை மற்றும் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக வேண்டி செயலாளர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்தல் , கொழும்பு துறைமுக நகரத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் குறித்த வேலைத்திட்டம் இடை நிறுத்தப்பட்டது.
இதன் கீழ் இனங்காணப்பட்ட குறைப்பாடுகள் மற்றும் அதன் செயற்பாடுகளை சரி செய்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு அனுமதி வழங்குவதற்கு உள்ள அவகாசங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் பிரதமரின் செயலாளரின் தலைமையில் கீழ் உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவொன்றை அமைப்பதற்கு கொள்கை திட்டமிடல், பொருளாதார விவகார, சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார விவகார அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுநீரக நிதியத்தினை நிறுவுதல் துரிதமாக பரவி வரும் சிறுநீரக நோய் தொடர்பில் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் பொருட்டு சிறுநீரக நோய் நிவாரண மேற்பார்வை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் இயங்கும் உப குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறே ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சிறுநீரக நோய்த் தடுப்பு ஒருங்கிணைப்பு பிரிவு நிறுவப்பட்டு இவ் ஒட்டுமொத்த செயன்முறையின் ஒருங்கிணைப்பு மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் 2015 ஆம் ஆண்டின் இடைக்கால வரவு செலவு திட்டப் பிரேரணைகள் மூலம் தேசிய சிறுநீரக நிதியமொன்றை ஏற்படுத்துவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளமையினால் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் தேசிய சீறுநிரக நிதியமொன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொருளாதாரத்தில் இடம்பெறும் துரித வளர்ச்சியின் காரணமாக 2020 ஆம் ஆண்டளவில் விமானப் பயணிகளின் இடம்பெயர்ச்சி 14.5 மில்லியனாக இருக்குமென அண்மையில் மேற் கொள்ளப்பட்ட மீளாய்வொன்று எதிர்வு கூறியுள்ளது.
இதனடிப்படையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்திசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுளள்து.
இதற்கிணங்க ஜப்பான் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ உறுதிப்பாட்டின் பிரகாரம், குறித்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டத்தின் கட்டம் 11 ஐ நடைமுறைப்படுத்தும் பொருட்டு 45,428 மில்லியன் ஜப்பான் யென் (அண்ணளவாக ரூபா 48,969 மில்லியன்) கடன் தொகையொன்றை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் ஊடாக வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கத்தினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குறித்த கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்காக ஜப்பான் அரசாங்கத்துடன் கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட கொள்கைத் திட்டமிடல், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கிழக்கு மாகாணத்திலிருந்து மத்திய மாகாணம் வரையிலான புவியியல் வலையத்தின் பாரிய நெடுஞ்சாலை இணைப்புப் பகுதிகளில் ஒன்றாக பேராதனை – பதுளை – செங்கலடி ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
151.3 கிலோ மீற்றர் நீளத்தைக் கொண்ட பதுளை முதல் செங்கலடி வரையிலான எஞ்சிய பகுதி அபிவிருத்தி செய்யப்பட இருக்கிறது.
குறித்த பாதையின் நுழைவாயில் பொதுவாக மிகவும் ஒடுக்கமானதாகவும், இடர்பாடு மற்றும் தரம் குறைந்த வீதி மேற்பார்வை கொண்ட தாழ்ந்த பகுதியாகவும் காணப்படுகின்றது.
குறித்த புனர்நிர்மாண பணிகளுக்காக வேண்டி ஒபெக் அமைப்பினால் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது. மேலும் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி அபிவிருத்திக்கான சவூதி நிதியத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுள்ளது.
அதனடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கம் சமவச்சதீவு முனிச்சேனை ஆகியவற்றுக்கிடையில் காணப்படும் கடனீரேரிக்குக் குறுக்காக தட்டுத்துறை பாலத்தை நிர்மாணிப்பதற்காகவும் ஒவ்வொரு பக்கத்திலிருந்து 500 மீற்றர் பாலத்திற்கான வீதிகளையும் நிர்மாணிப்பதற்காகவும் மட்டக்களப்பு – திருகோணமலை வீதி அபிவிருத்திக்கு சவூதி நிதியத்திடமிருந்து பெறப்பட்டு மீதமான கடன் தொகையை ஒதுக்குமாறு அபிவிருத்திக்கான சவூதி நிதியத்திடமிருந்து ஒப்புதலையும் பெற்று 601,581.31 ஐக்கிய அமெரிக்க டொலரினை பயன்படுத்த நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன் பிள்ளைப் பருவ சிறுவர்களின் நலன் புரிக்காக அதிகூடிய நிதிகளை முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை அரசாங்கத்தின் அபிவிருத்தி உபாய முறைகளின் மூலம் நல்ல முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளையில் அதற்கு இணங்கியதாக உரிய போசாக்கு, பாதுகாப்பு சிறுவர் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆகியவற்றின் சேவைகளின் தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் 0-5 வரையான வயதுடைய பிள்ளைகளுக்காக பாதுகாப்பானதும் பொருத்தமானதுமான சுற்றுச் சூழலொன்றை உறுதி செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும். அவ்விலக்கை அடைந்து கொள்ளும் நோக்கில் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி கருத்திட்டம் 2015 – 20120 முன் மொழியப்பட்டுள்ளது.
உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பினால் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமது நிதிப்பங்களிப்பை வழங்குவதற்காக விருப்பத்தை தெரிவித்துள்ளது.
இதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமனான விசேட கடன் உரிமையை வழங்குவதற்கு உலக வங்கி தனது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுாராட்சி அதிகார சபைகளுக்கு ஆதரவளிப்பதற்காக பொறுப்புடனும் கணக்குக் கூறக்கூடிய விதத்திலும் அவற்றின் சேவைகளையும் உற்நாட்டு உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் வட கிழக்கு உள்நாட்டுச் சேவைகள் மேம்பாட்டுக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போதிருக்கும் கருத்திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 65 பிரதேச சபைகள், 12 நகர சபைகள் மற்றும் 03 மாநகர சபைகள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது.
இவ்வேலைத்திட்டத்தின் மேலதிக வேலைகளை செய்து முடிப்பதற்காக நிதியிடல் இடைவெளியை மூடுவதற்காக இலங்கை அரசாங்கத்தின் வேண்கோளுக்குப் பதிலளிக்கும் வகையில், மேற் குறிப்பிட்ட கருத்திட்டத்தை தொடர்வதற்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான தொகையொன்றை விசேட கடன் எடுப்பு உரிமையாக பெற்றுக் கொள்வதற்கு உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற் கொள்வதற்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் உலர் வலய நகர நீர் வழங்கல் மற்றும் துப்புற வேற்பாட்டு செயற்றிட்டமானது வவுனியா, மன்னார், சிலாபம் மற்றும் புத்தளம் போன்ற உலர் வலய நகரங்களின் நீர் வழங்கல் மற்றும் துப்புறவேற்பாட்டு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சினால் செயற்படுத்தப்பட்டது.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா – பேராரு நீர்த்தேக்கத்தை அமைக்கும் பொருட்டு காணிகளை இழந்த 88 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு காணி அமைச்சர் எம்.கே.டீ.எஸ் குணவர்தனவும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச கொள்கையில் உள்ளவாறு சுகாதார பராமரிப்பு தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், சமத்துவமான முறையில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினராலும் பெறக் கூடிய தரமான சேவையை உயர்ந்த மட்டத்தில் பராமரிப்பது அவசியம்.
இதனடிப்படையில் இலங்கை அரச மருத்துவ மனைகளுக்கு செல்லும் நோயாளர்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் சுகாதார பராமரிப்பு தரம் மற்றும் நோயாளர் கொள்கை ஆவணத்தின் பொருட்டு சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடெங்கும் மிக துரிதமாக பரவி வரும் சிறுநீரக நோய்க்கு மிக முக்கிய காரணிகளில் இரசாயன பசளை, கிருமி நாசினி மற்றும் புல் நாசினி பாவனை என்பன முக்கிய இடம் வகிக்கின்றன.
இதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 4 வகையான நாசினிகளை இறக்குமதி மற்றும் பாவனை என்பவற்றை அரசாங்கம் இதுவரை முழுமையாக தடை செய்துள்ளது. இதற்கும் மேலதிகமாக கிலய்போசட் கிருமி நாசினி இறக்குமதி மற்றும் பாவனை என்பவற்றை முழுமையாக தடை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2011.01.01 ஆம் திகதி தொடக்கம் 2015.01.08 ஆம் திகதி வரை உள்ள காலப்பகுதியில் அக்கால அரசாங்கத்தின் மூலம் பாரியளவு நிதி போக்குவரத்து துறைக்கு முதலிடப்பட்டது. அதன் மூலம் நிர்வாகம், தொழில்நுட்பம், நிதி மற்றும் ஏனைய முக்கிய விடயங்களில் அரசாங்கத்துக்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வதற்கும், அவ்வாறு இடம்பெற்று இருந்தால் அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதற்கும், எதிர்காலத்தில் அவ்வாறு இடம்பெறா வண்ணம் குறித்த வழிவகைகளை செய்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் செயற்படும் பெருந்தெருக்கள் துறையின் மோசடிகளை தேடல் பிரிவொன்றை அமைக்கும் நோக்கில் பெருந்தெருக்கள் மற்றும் மதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹசீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி மோசமான நிலையில் காணப்பட்ட மட்டக்களப்பு நீதிமன்ற தொகுதியின் மீள் கட்டுமான பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதன. இந் நீதிமன்ற தொகுதியின் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல மேலும் பல தேவையான வசதிகளை செய்து கொடுக்க, குறித்த வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பில் நீதிமன்ற அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளக ரீதியாக இடம் பெயர்ந்தவர்கள் அனைவரையும் தமது ஆரம்ப இருப்பிடங்களில் மீள் குடியமர்த்துவதே அரசாத்தின் கொள்கையாகும். இந்த நோக்கத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கும் நோக்கில் யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட இடம் பெயர்ந்த 2,175 குடும்பங்களை மீள் குடியமர்த்துவதற்காக வேண்டி தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் 160 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்குவதற்காக மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதனினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
“நெற் பயிர் செய்கை நிலத்துடனான நீர் மற்றும் சுற்றுச் சூழல் தொடர்பில் சர்வதேச வலையமைப்பு” 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச ஒத்துழைப்புக்கான வலையமைப்பாகும்.
நேற் பயிர் செய்கை நிலங்களின் சுற்றுச் சூழல் பகுதியை நிலையான தன்மை தொடர்பில் கவனம் செலுத்தி முறையான நீர் முகாமைத்துவத்தை மேற் கொள்வதே இதன் அடிப்படை நோக்கமாகும். இவ்வலையமைப்பில் 17 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.
இதன் 12 ஆவது செயற் குழு கூட்டமும் மாநாடும் இம்முறை இலங்கையை மையமாக கொண்டு 2015 நவம்பர் மாதம் நடாத்துவதற்கு நீர்ப்பாசன அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியினை அதிகரித்தல், பால் உற்பத்தியாளர்களை உற்சாகப்படுத்தல் மற்றும் தேசிய உணவு முறையினை பழக்கப்படுத்தல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற் குறிப்பிட்ட வகையில் பாடசாலை மாணவர்களுக்கு பால் பக்கற் ஒன்றினை பெற்றுக் கொடுப்பதற்கு வரையறுக்கப்பட்ட மில்கோ தனியார் நிறுவனத்தின் ஊடாக நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது.
2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட புதிய வரவு செலவு திட்டத்தின் முன்வைப்புக்களின் அடிப்படையில் ஒரு லீற்றர் பாலின் விலை 70 ரூபாவாக உயர்வடைந்துள்ளதை அடிப்படையாக வைத்துக் கொண்டு கல்வி அமைச்சு, சமூக சேவைகள், நலன்புரி அமைச்சு மற்றும் வரையறுக்கப்பட்ட மில்கோ தனியார் நிறுவனம் ஆகியவற்றிற்கிடையில் செய்து கொள்ளப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 150 மில்லி லீற்றர் அடங்கிய பால் பக்கற் ஒன்றினை 20 ரூபா நிர்ணயிக்கப்பட்ட விலையில் மில்கோ நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்வது மேற் குறிப்பிட்ட வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ் வேலைத்திட்டம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் குறித்த வேலைத்திட்டம் இடை நிறுத்தப்பட்டது. இதன் கீழ் இனங்காணப்பட்ட குறைப்பாடுகள் மற்றும் அதன் செயற்பாடுகளை சரி செய்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு அனுமதி வழங்குவதற்கு உள்ள அவகாசங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் பிரதமரின் செயலாளரின் தலைமையின் கீழ் உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவொன்றை அமைப்பதற்கு கொள்கை திட்டமிடல், பொருளாதார விவகார, சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார விவகார அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வீ(ச)
