மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இரண்டு முறை மாட்ரிட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவரும் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான செரீனா, மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுவாரஸ் நவாரோவை 6-1, 6-3 என்ற நேர்செட்களில் வென்றார்.
அரையிறுதியில் பெட்ரா கிவிடோவா அல்லது ஐரினா கேமலியா பெகுவுடன் செரீனா விளையாடுவார்.
இதேபோல் மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் மரிய ஷரபோவா கடுமையாகப் போராடி கரோலின் வோஸ்னியாக்கியை 6-1, 3-6, 6-3 என்ற செட்கணக்கில் வென்றார்.(ந)