யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அதிரடி இடமாற்றம்!

யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி வழங்கப்பட்ட இடமாற்றங்களின் விபரங்கள் இதே! 

யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் வீரசேகர, சீதாவாக்‍கபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார்.  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.கே.ஜயலத் யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜே.ஏ.விஜயசேகர யாழ் மாவட்டத்தில் இருந்து கிளிநொச்சிக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.  உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ்.டி.வீரசிங்க கிளிநொச்சியில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். 

உதவி பொலிஸ் அத்தியட்சகர் யு.ஏ.பி. பெர்னாண்டோ மன்னாரில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.  உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.கே.ஏ. சேனாரத்ன யாழ் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். 

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.ஏ.டி.ஈ.எல். ரன்தெனிய முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். 

மேலும் ஊர்காவல்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் கிவ்.ஆர்.பெரேரா, மன்னார் பொலிஸ் நிலையத்திற்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையை தலைமையக பொலிஸ் பரிசோதகர் பீ.எம்.ஆர்.கே.பி.பாலசூரிய வவுனியா பொலிஸ் பிரிவுக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர். 

அத்துடன் வெல்லவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.யூ.கே.வுட்லர் யாழ் தலைமையக பொலிஸ் பரிசோதகராகவும் இடமாற்றம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 

புங்குடுதீவில் 18 வயதான மாணவி ஒருவர் கடத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்களை கடந்த 20ம் திகதி நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த வேளை அங்கிருந்தவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

மேலும் நீதிமன்ற கட்டடம் உள்ளிட்ட அரச உடமைகளுக்கும் இதன்போது சேதம் ஏற்பட்டது.  இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களைக் களைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கைதான 130 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அத
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -