சுலைமான் றாபி-
கல்முனையில் முன்னணி விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான டொப் ஹீறோஸ் விளையாட்டுக் கழகம் தனது கிரிகட் சுற்றுத்தொடரின் 95வது பூட்டித்தொடரினை ஞாபகப் படுத்துமுகமாக சினேகபூர்வ கடினபந்து T20 கிரிகெட் போட்டி ஒன்றினை கழகத்தின் தலைவர் தேசசக்தி கே.எல்.சுபைர் தலைமையில் இன்று கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடாத்தியது. இதில் கல்முனை டொப் ஹீறோஸ் அணியும், கல்முனை அஷ்-ஷம்ஸ் அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கல்முனை அஷ்-ஷம்ஸ் அணி முதலில் கலத்தடுப்பினை தெரிவு செய்ய, முதலில் துருப்பெடுத்தாடிய டொப் ஹீறோஸ் அணி 20 ஓவர்கள் நிறைவடைவில் 07 விக்கட் இழப்பிற்கு 101 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் அவ்வணி சார்பாக பர்ஹான் 21 ஓட்டங்களையும், அஸ்மிர் 13 ஓட்டங்களினையும் பெற்றனர்.
பதிலுக்கு துருப்பெடுத்தாடிய கல்முனை அஷ்-ஷம்ஸ் அணி 13வது பந்து வீச்சு ஓவர்கள் நிறைவில் 04 விக்கட் இழப்பிற்கு 104 ஒட்டங்களினைப் பெற்று மேலதிக 06 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றனர்.
இதில் அவ்வணி சார்பாக சர்ஜூன் 28 ஓட்டங்களையும், அதிரடியாக ஆடிய ராபாத் 07 பந்துகளில் 20 ஓட்டங்களினையும் பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்த சிநேகபூர்வ பிரதம அதிதியாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம். ஜாபிர் கலந்து கொண்டு பெற்றிபெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணத்தினை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட புலனாய்வுத் துறை உத்தியோகத்தர் எம்.ஏ.எம். அஸ்லம், ஜிம்கான விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.லாபிர், கல்முனை அஷ்-ஷம்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எல். சர்ஜூன், டொப் ரேங்க் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர் ஏ.சி.எஸ். ரகுமான் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.ச


