ஏறாவூருக்கு என்ன நடக்கும்? பசீர் சேகுதாவுத்தின் திறந்த அரங்கு கலந்துரையாடல்!

முஹம்மட் அஸ்மி-
முன்னாள் அமைச்சரும் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தவிசாளரும் - மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய அல்ஹாஜ் - பசீர் சேகுதாவுத் அவர்களின் திறந்த வெளி பொது மக்கள் கலந்துரையாடல் இன்று மாலை 6.45 மணிக்கு (மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து) ஏறாவூர் ஆற்றாங்கரை -சிறுவர் பூங்கா திறந்த வெளி அரங்கில் அஷ்ரப் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற இருக்கின்றது -

"தேர்தல் முறை மாற்றமும் -இலங்கை முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலமும் " 

எனும் பிரதான கருப்பொருளை மையமாக வைத்து ஆரம்பமாகும் இந்த கலந்துரையாடலில் - 

"ஏறாவுருக்கு என்ன நடக்கும்? இல்லாமையே பதிலா ?"

கிளர்ந்து பேசுவது அல்ல கலந்து பேசுவதே அவசியம் - என்ற அடிப்படையில் கேள்விகளை கேட்டு பதில்களை பெறத்தக்க வகையில் -திறந்த மனதுடன் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப் பட உள்ளன -

பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவுத் அவர்களின் அரசியல் ஆதரவுத் தளத்திற்கு அப்பால் அவரின் பேச்சாற்றலின் வசீகரத்தாலும் அவரின் சாணாக்கியம்மிக்க கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்டு இருக்கும் அவரின் அபிமானிகளுக்கு இன்றைய திறந்த வெளி கலந்துரையாடல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது -

பொருத்தமான நேரத்தில், பொருத்தமான ஒரு இடத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளமையும் ஏறாவூரின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு எவ்வாறு இருக்கப்போகிறது - யார் ? யாரோடு? என்ற கேள்வியுடன் விடை தெரியாமல் ஆவலோடு காத்திருக்கும் ஏறாவூரின் அரசியல் ஆர்வலர்கள் மற்றும் மட்டக்களப்பின் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு  தவிசாளரின் கலந்துரையாடலின் ஊடாக பல தெளிவுகள் கிடைக்கும் என்பதால் நிச்சயம் ஒரு பெருந் திரளை அங்கு எதிர்பார்க்கலாம் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -