பதியதலாவ - கடுபஹர கெஹெல்உல்ல பிரதேசத்தில் லொறி ஒன்றில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தை அடுத்து ஒரு குழுவைச் சேர்ந்த மூவர் மற்றைய குழுவின் மூவரை லொறியில் நசுங்குண்டு இருவரை கொலை செய்துள்ளனர்.
28 மற்றும் 29 வயது நபர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
