8-ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 8-ந் திகதி முதல் மே 24-ஆந் திகதி வரை நடக்கிறது.
8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி சென்னை, மும்பை, டெல்லி,கொல்கத்தா, மொகாலி, விசாகப்பட்டினம், ராய்ப்பூர் உள்பட பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெறும்.
இந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 7 லீக் ஆட்டங்களை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் விளையாடுகிறது.
சென்னையில் வருகிற 9-ந் திகதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. 2-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிற 11-ஆந் திகதி ஐதராபாத் சன் ரைசர்ஸ் (மாலை 4 மணி) அணியை எதிர்கொள்கிறது.
சென்னையில் நடைபெறும் முதல் இரண்டு லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள கவுண்ட்டர்களில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறைந்தபட்சமாக ரூ.750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பாக்ஸ் டிக்கெட் ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர ரூ.1,500, ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் ஆகிய விலைகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது.
