அஹமட் இர்ஸாட்-
கல்குடா பிரதேசம் மட்டுமல்லாமல் அகில இலங்கை ரீதியாக அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூக சேவைகளை செய்து வரும் கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் தலைமை காரியாலயத்துக்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைமையும் நீர்வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் கடந்த சனிக்கிழமை 04.04.2015 விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
கல்குடா பிரதேசத்தில் உள்ள வறிய கிராமங்களில் மக்களின் அத்தியவசிய தேவையாக உள்ள குடிநீர் பிரச்சனைகளுக்கு இலவச கிணறுகள், குழாய் கிணறுகள் நிர்மாணித்து சமூக சேவை செய்து வரும் அல்-கிம்மா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஹாரூன் ஸஹ்வியை அமைச்சர் றவூப் ஹகீம் பாராட்டியதுடன், தொடர்ந்து இவ்வாறான சமூகப்பணிகளை நாடளாவிய ரீதியில் வெற்றியுடன் தொடர்வதற்கு தனது வாழ்த்தினை அல்- நிறுவனத்துக்கு தெரிவித்துக் கொண்டார்.
இவ்விஜயத்தின் போது சிறீலங்கா முஸ்லிம் கங்கிரசின் தலைமையுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்-ஹாஜ் ஹாபிஸ் நஸீர் அஹமட், மற்றும் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், அலி சாஹிர் மௌலானா, அமைச்சரின் இணைப்புச்செயலாளர் வை.எல்.எம். முபீன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் வருகை தந்திருந்ததுடன், அமைச்சர் உட்பட அனைத்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பிரமுகர்களுக்கும் அல்-கிம்மா நிறுவத்தின் பணிபாளரினாலும் நிறுவாக உத்தியோகத்தரினாலும் மகத்தான வரவேற்பளிக்கட்டதை காணக்கூடியதாக இருந்தது.
மேலும், இதன் போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் உரையாடிய அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளார் ஹாரூன் கல்குடா பிரதேசத்தில் குடிநீரானது முற்றாக மாசடைந்திருப்பதனை உணர்ந்த எமது நிறுவனம் சென்ற வருடம் இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வினை தறுமாறு முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் மகஜர் கையளித்தது சம்பந்தமான விடயத்தினை சுட்டிக்காடியதுடன், நாடளாவிய ரீதியில் இலவசமாக அல்-கிமா நிறுவனமானது செய்து வருக்கின்ற சமூக சேவைகளைப் பற்றி விலாவாரியாக அமைச்சருக்கு எடுத்துக் கூறினார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)