பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெனாண்டோவின் இணைப்புச் செயலாளர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வென்னப்புவ - நைனாமடம் பகுதியில் நேற்று (05) இரவு 8 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுஜித் பிரியந்த ஹப்புகாமி என்பவரே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது வீட்டுக்குள் நுழைந்தவர்கள் துப்பாக்கியால் தாக்கி பின் கத்தியால் வெட்டியதாக இணைப்புச் செயலாளர் கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்திய ஒருவர் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் நெருங்கிய நண்பர் என காயமடைந்த நபர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
