|
போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளது.
ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணைகளின் மூலம் திரட்டப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களின் பட்டியல்களை விசாரணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இந்த விபரங்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரி அறிக்கை வழங்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அடுத்த அமர்வுகளின் போது இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
|
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
போர்க்குற்றவாளிகளின் விபரங்களை இலங்கையிடம் ஒப்படைக்கிறது ஐ.நா!
