|
இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்கவை பணிநீக்கம் செய்யாவிட்டால் 19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்சவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் ஆணையாளரை நீக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் கடுமையாக வலியுறுத்தி வருகின்றனர்.
தில்ருக்ஸி டயஸை அரசாங்கம் பணி நீக்காவிட்டால் 19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
நாளை 19ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள சில உறுப்பினர்கள் குறித்த நிபந்தனையை முன்வைத்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக ஏற்கனவே சில தடவைகள் இந்த திருத்தச் சட்டம் குறித்த விவாதத்தை நடத்த முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
|
Home
/
LATEST NEWS
/
Slider
/
அரசியல்
/
அறிக்கைகள்
/
செய்திகள்
/
மகிந்த அணியினர் 19க்கு ஆதரவு வழங்க புதிய நிபந்தனை!
