ஏறாவூர் புதிதாக நியமிக்கப்பட்ட தவிசாளர்,உப தவிசாளர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு!

ஏ.எம் றிகாஸ்-

றாவூர் நகர சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நகர சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

ஏறாவூர் நகர சபையின் புதிய தவிசாளராக முகம்மது இஸ்மாயில் முகம்மது தஸ்லிம் மற்றும் உப தவிசாளராக மீராலெப்பை ரெபு பாசம் ஆகியோர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். 

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்வை சலீம், பிராந்நிய உள்ளுராட்சி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக இருந்த செய்யித் அலிஸாஹிர் மௌலானா கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து ஏற்பட்ட தவிசாளர் வெற்றிடத்திற்கு ஏற்கனவே உப தவிசாளராக இருந்த எம்.ஐ.எம் தஸ்லிம் தெரிவு செய்யப்பட்டார். அதேநேரம் உப தவிசாளர் நிலைக்கு விருப்பு வாக்கின் அடிப்படையில் எம்எல் ரெபு பாசம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்எச்எம் ஹமீம் தெரிவித்தார்.

பிரதேச சபையாக இருந்து நகர சபையாகத் தரமுயர்த்தப்பட்ட ஏறாவூர் உள்ளுராட்சி மன்றத்தின் இரண்டாவது பதவி நிலைத் தெரிவு இதுவாகும். இந்த உள்ளுராட்சி மன்றத்தின் வரலாற்றில் மிகவும் வயது குறைந்த தவிசாளர் எம்ஐஎம் தஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -