விகிதாசார பிரதிநிதித்துவமுறை நீக்கப்படுமானால் சிறுபான்மையினர் பாதிப்பை எதிர்நோக்குவர்!

எம்.வை.அமீர்-
லங்கையில் விகிதாசார பிரதிநிதித்துவமுறை உயிருடன் இருப்பதாலேயே இங்கு வாழும் சிறுபான்மையினர் ஓரளவேனும் அவர்களை அவர்களே ஆளும் நிலை ஏற்பட்டிருந்ததாகவும் இவ்வாறானதொரு நிலை நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக வேறு ஏதாவது முறைகள் உட்புகுத்தப்ப்படுமாக இருந்தால் அதன் காரணத்தால் சிறுபான்மையினர் தங்களது பிரதிநிதித்துவங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதியும் உயர்பீட உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம்.முஸ்தபா எச்சரிக்கை விடுத்தார்.

பிழையான வழிகாட்டலின் காரணமாகவும் உயர் அழுத்தத்தின் காரணமாகவும் பாரம்பரியமாக நெற்செய்கையில் ஈடுபட்டு வந்த சுமார் 750 ஏக்கர் காணிகள், பொருத்தமில்லாத கரும்புச் செய்கைக்கு திணிக்கப்பட்டதை எதிர்க்கும் காணிச் சொந்தக்காரர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதியும் உயர்பீட உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம்.முஸ்தபா அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று 2015-04-05 ம் திகதி சம்மாந்துறையில் றஹீம் அவர்களது இல்லத்தில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஏ.எல்.அசனார் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் ஊடாகவே சிறுபான்மையினர் அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் திகழ்வதாகவும் அதனூடாக தங்களது காணிப்பிரச்சினை போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளை பேசக்கூட முடிவதாகவும் அந்த அடிப்படையிலேயே தற்போது ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினையை சிறுபான்மை அமைச்சர்கள் ஊடாக அனுக முடிவதாகவும் தெரிவித்தார்.

இன்று நாட்டில் இடம்பெற்றுள்ள ஆட்சிமாற்றத்தின் காரணமாகவும் இருபெரும் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளதாலும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அற்ற நிலை தோன்றியுள்ளதாகவும், குறித்த எதிரக்கட்சி தலைவர் பதவிக்கு சிறுபான்மை கட்சியின் தலைவரான இரா.சம்மந்தன் போன்றவர்கள் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும், குறித்த எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இரா.சம்மந்தன் அவர்களை நியமிப்பதன் ஊடாக ஜனநாயகத்துக்கு உயிரூட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மூன்று சமூகங்களையும் சேர்ந்த சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் குறித்த விவசாய நிலத்தின் பிரச்சினையால் பாதிக்கப்படுவதாகவும் இவர்களுக்கான நியாயம் கிடைக்க அதுசார்ந்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து தீர்வைப் பெறுவதற்கு பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -