சேவையில் இருந்து தப்பியோடிய இராணுவ வீரர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் நாளை முதல் இடமபெறவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
சேவையில் இருந்து தப்பியோடிய இராணுவ வீரர்கள் சட்ட ரீதியாக இராணுவத்தில் இருந்து விலக வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் இன்றுடன் நிறைவடைவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த காலப்பகுதியில் சட்ட ரீதியாக விலகாதவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை நாளை முதல் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை குறித்த பொது மன்னிப்புக் காலத்தில் இதுவரை 23,600 பேர் இராணுவத்தில் இருந்து சட்டரீதியாக விலக கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களில் 18,500 பேர் சட்ட ரீதியாக விலக்கப்பட்டுள்ளதாக ஜயநாத் ஜயவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மீதமுள்ளவர்களையும் எதிர்வரும் சில தினங்களில் விலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.(ந-த்)
