தேசியக் கொடி விவகாரம் - விஷேட விசாரணை ஆரம்பம்!

மாற்றம் செய்யப்பட்ட தேசியக் கொடியை போராட்டத்தின் போது பயன்படுத்திய சம்பவம் குறித்து பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். 

அண்மையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, சிறுபான்மையினரைக் குறிக்கும் நிறங்கள் உள்ளடக்கப்படாத, இலங்கை தேசியக் கொடியை ஒத்த கொடி பயன்படுத்தப்பட்டது. 

இந்த விடயம் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக தெரியவருகின்றது. 

எதுஎவ்வாறு இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த விடயம் தொடர்பில் கவலை வௌியிட்டமை குறிப்பிடத்தக்கது.(ந-த்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -