ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொலன்னாவ மஸ்ஜித் சம்மேளனம் ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு வெல்லம்பிட்டிய வித்தியாவர்த்தன சிங்கள வித்தியாலயத்தில் தற்போது (இன்று ஞாயிற்றுக் கிழமை) சம்மேளனத்தின் தலைவர் சாமசிறி ஐ.வை.எம். ஹனீப் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் வெல்லம்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி தர்மதாஸ கொலன்னாவ விமலராம விகாராதிபதி லபுதலே சுதர்ஷன தேரர், இஹ்ஸானியா அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் பாறுக் மௌலவி, கொலன்னாவ புனித ஜோசப் தேவாலயத்தின் அருட் தந்தை ஜூட் கிரிசாந்த, சிவில் பாதுகாப்புச் சபையின் தலைவர் டி.என்.எம்.பத்திரன, வை.எம்.எம்.ஏயின் பிரதிநிதி தாசிம், தேசிய ,இரத்த வங்கியின் உதய பெரேரா மற்றும் ,இரத்த வங்கியின் வைத்தியர்கள், தாதியர்கள், தொழிலதிபர் எம்.இஸட். பெரோஸ் சங்கத்தின் செயலாளர் பாறுக் றஹீம் உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில் மூவின சமுகத்தைச் சேர்ந்தவர்களும் தேசிய இரத்த வங்கிக்கு இரத்ததானம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)