பி. முஹாஜிரீன்-
பாலமுனை அல் அறபா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் பாலமுனைப் பிரதேசத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் 'சாதனையாளர் விருது 2015' நிகழவு நடைபெற்றது.
அல் அறபா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ். ஆப்தீன் தலைமையில் நேற்று சனிக்கிழமை (25) மாலை பாலமுனை இப்னு சீனா கனிஷ்ட வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். காஸிம் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில், கலாநிதி சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல்.ஏ.கபூர், உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.அபுல் ஹஸன், ஓய்வுபெற்ற ஆசிரியர் கலாசாலை அதிபர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.அப்துல் ஹபீழ், ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.அப்துல் லத்தீப், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.பஸ்மில் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
மேலும் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.சாஹூல் ஹமீட், அதிபர்களான எஸ்.எம்.எம்.ஹனீபா, கே.எல்.உபைதுல்லா, எம்.சி.அப்துல் ஸமட், எம்.ஐ.ஸாகிர் ஹூஸைன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும், பொறியியலாளர்களான எம்.எச்.நௌஸாத், எம்.எச்.எம்.சமீன் மற்றும் வைத்தியத்துறை மாணவர்களான எஸ்.எம்.றிபாஸ்தீன், ஏ.எல்.சுதைஸ் அகமட், எம்.எப். ஜூப்னாஸ் ஆகியோர் விசேட அழைப்பாளர்களாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் பாலமுனைப் பிரதேசத்தில் பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம், அல் ஹிதாயா வித்தியாலயம் மற்றும் வெளிப் பிரதேச பாடசாலைகளில் கற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 35 மாணவர்கள் சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் இவ்வருடத்திற்கான க.பொ.த (சா/த) பரீட்சை விருது பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கப்ட்டமை சிறப்பம்சமாகும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)