கருணாவை விசாரணை செய்ய வேண்டும் -உலமா கட்சி தலைவர்!

முஹம்மட் பஹாத்-
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை விசாரணை செய்யுமாறு இலங்கை உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத், காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்முனையில் நடைபெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் சாட்சியமளித்தார்.

இதன்போது 1990ம் ஆண்டு புலிகளால் கைது செய்யப்பட்டு காணாமல்போன தனது சகோதரர் அக்ரம் மற்றும் தந்தை சம்பந்தமாகவும் முன்னாள் பிரதியமைச்சர் அமைச்சர் முரளிதரனிடம் விசாரிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான விசாரணைகள் கடந்த இரு நாட்களாக கல்முனையில் நடைபெற்று வருகிறது.

ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -