அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் மக்களுக்கான சலுகையில், விவசாயக்கடனுக்கு 50 சதவீத சலுகையென உறுதி வழங்கப்பட்டுள்ளபோதும் அது இதுவரை நடைமுறையில் இல்லை என வன்னி விவசாயிகள் உட்பட பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதுவரைக்கும் நகைக் கடன்கள் தொடர்பாகவோ விவசாயக்கடன் தொடர்பாகவோ எந்த வித மானியங்களும் மக்களுக்கு வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விவசாயக்கடன் மக்களுக்கு 50 வீத சலுகை வழங்குவதாக 100 நாள் வேலைத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட போதிலும் 90 நாள் தாண்டியும் விவசாயக்கடனுக்கான நிவாரணம் எதுவித சலுகையும் வழங்கப்படவில்லை.
இவ்விடயத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வந்து நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு அமைவாக கடன்களுக்கு வட்டிச் சலுகையை வழங்கி மீளப் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுத்துத் தரும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
