20ஆம் திருத்தச்சட்டம் குறித்து சகல கட்சிகளுடனும் கலந்துரையாட தாம் தயார் - எதிர்கட்சி தலைவர்

தேர்தல் முறைமைகளை மாற்றும் வகையில் 20ஆம் திருத்தச்சட்டம் குறித்து சகல கட்சிகளுடனும் கலந்துரையாட தாம் தயாராக உள்ளதாக எதிர் கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் தயாரிக்கப்பட்ட 20ஆம் திருத்தச்சட்ட வரைபு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முறைமையில் அவசியமான மாற்றத்தை மேற்கொள்வதற்காக அண்மையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னாள் அமைச்சர் ஜி எல். பீரிஸின் தலைமையில் நான்கு உறுப்பினர்களை கொண்ட குழுவொன்றை அமைத்திருந்தது.

இதேவேளை, தினேஸ் குணவர்தனவின் பரிந்துரைக்கு அமைய புதிய வரைபு ஒன்றை தயாரிக்க அந்த குழு தீர்மானித்துள்ளதாக குழுவின் உறுப்பினர், சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -