பாராளுமன்றம் வரும் புதன்கிழமை கலைக்கப்படும் வாய்ப்பு?

பாராளுமன்றம் வரும் புதன்கிழமை (ஏப்ரல் 29) கலைக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக அரச முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 

19வது திருத்தச் சட்டம் நாளை திங்கட்கிழமை (ஏப்ரல் 27) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டாலும், நிறைவேற்றப்படாவிட்டாலும் பாராளுமன்றத்தை வரும் புதன்கிழமை இரவு கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, ஜனாதிபதி தலைமையில் அண்மையில் நடைபெற்ற தேசிய நிறைவேற்று சபைக் கூட்டத்தில் பாராளுமன்றத்தை மே மாதம் முதல் வாரத்தில் கலைக்கப்பட்டு, தேர்தலை யூன் மாதம் இறுதி வாரத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -