எம்.ஜே.எம். முஜாஹித்-
இலங்கை நிருவாக சேவையில் நீண்ட காலம் கடமையாற்றி ஓய்வு பெருகின்ற வேலையில் நமது கிழக்கு மக்களுக்கு பெரும் சேவையாக பொது நிருவாக தாபன சேவைக்கான வழிகாட்டல் நூல் அமைந்துள்ளது. இதனால் எமது பிராந்திய அரச ஊழியர்களும், அரச உத்தியோகம் பெற போட்டி பரீட்சை எழுதவுள்ளோர்களும் பெரும் நன்மை அடைவார்கள்.
இக்காலத்தின் தேவையே இன் நூல் என கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் உள்ளுராட்சி, கிராமிய அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் போக்குவரத்து, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றாடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவிச்செயலாளரும், இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தருமான எம்.ஐ. சலாகுடீன் அவர்களினால் எழுதப்பட்ட பொது நிருவாக தாபன வேலைகளுக்கான வழிகாட்டல் புத்தக அறிமுக விழா அம்பாறை மாவட்ட மூன்டீரைட் ஊடகவியலாளரின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.எஸ்.எம். ஜஃபர் தலைமையில் அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷாத், பிரதி செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் உட்பட கல்விமான்களும் கலந்து கொண்டனர்.
நூலாய்வினை நாவிதன்வெளி பிரதேச சபையின் செயலாளர் எம். ராமக்குட்டி மேற்கொண்டார்.முதல்பிரதியை அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று சுகாதார பணிப்பாளர்களான ஏ.எல். அலாவுதீன், எம்.ஐ. சித்தீக், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் ஆகியோர் பெற்றுக்கொண்னர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)