அஸ்ரப் ஏ சமத்-
ஜனாதிபதியிடமிருந்து தணக்கு எவ்வித கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை என்றதும் செத்சிரிபாய முன்றலில் உண்னாவிரதப்போராட்டத்தில் குதிப்பு.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தொழிலை இழந்த 162 ஊழியர்கள் தமது உண்னாவிரதத்தைக் கைவிட்டனர். ஜனாதிபதி மைத்திரிpபால சிறிசேனாவின் பணிப்பில் இந்த ஊழியர்களை மீள சேவையில் இணைக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
ஆனால் இவ் ஊழியர்கள் இன்று செத்சிரிபாயவில் முன்றலில் பாற்சோறு உண்டு மீள செத்சிரிபாயவில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்திற்குச் தொழிலுக்கு சென்றனர்.
ஆனால் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளாருக்கு இதுபற்றி ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து எவ்வித கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை. என தெரிவித்ததையடுத்து மீண்டும் தொழில்வாய்ப்பை இழந்தவர்கள் செத்சிரிபாயவுக்கு முன்றலில் தமது உண்னா விரதத்தை மீளஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அரசியல் வாதிகளினால் தொழிலுக்கு நியமிக்கப்பட்டவர்கள். எனவும் 162 ஊழியர்களது தொழில்கள் அதிகாரிகளினால் இவர்களது தொழில்கள் பறிக்கப்பட்டிருந்தனர் இதனால் கடந்த 45 நாற்களாக பத்தரமுல்லையில் முன்றலில் சுழற்சி முறையில் உண்னாவிரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்கள் நெடுஞ்சாலை வீதிகளில் கடமையாற்றும் ஊழியர்கள், மற்றும் இலிகிதர்கள், தொழிலாளர்கள், என பல பிரிவுகளில் இவர்களுக்கு அரசியல் ரீதியாக நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இப் போரட்டத்தில் கூடிய பெண்களே இரவில் தங்கி இங்கு உண்னாவிரத்தில் ஈடுபட்டிருந்தமை காணக்கூடியதாக இருந்தது. இவர்கள் நாட்டின் பல தூர இடங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளாவர்.
மேற்படி விடயமாக கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பிணர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தலைமையில் சேவையில் இருந்து நீக்கப்பட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச் சந்திப்பிலேயே இன்று (20) ஆம் திகதியில் ;இருந்து வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் முதலீட்டுச்சபை ஊழியர்கள் 235பேரையும் மீள தொழில்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
இருந்தும் இதுவரை சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தில்; இருந்து எழுத்துமுல கடிதம் கிடைக்கவில்லை என அமைச்சின் அதிகாரிகள் தெரவிக்கின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)