CSN தொலைக்காட்சி சேவையை மூட CSN தொலைகாட்சி முகாமைத்துவம் முடிவெடுத்துள்ள நிலையில் அங்கே தொழில் புரிந்த 150 ஊழியர்களுக்கும் அவர்களது சம்பளத்தை வழங்க தீர்மானித்துள்ளது. CSN தொலைக்காட்சியில் மூன்று வருடங்களுக்கு மேல் வேலை செய்த ஊழியர்களுக்கான ஒரு வருட சம்பளத்தை வழங்க CSN முகாமைத்துவம் முடிவெடுத்துள்ளது.
இதன் படி CSN தொலைக்காட்சியில் 3 வருடமாக வேலை செய்த ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 7.5 மடங்கினை வழங்கவுள்ளதாக அதன் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஒரு வருட சம்பளத்தினை நாளை வழங்கவுள்ளது. CSN முகாமைத்துவ அறிக்கையின் படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்த 50க்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர்.
கடந்த காலங்களில் இந்த நிறுவனம் புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் விளையாட்டு தொலைக்காட்சி சேவைகளுக்கு ஆயிரம் மில்லியன் வரி கட்ட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
