இலங்கை- சீனா ஒப்பந்தங்கள் மற்றும் வணிக ஒப்பந்தங்களை மதித்து முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் சீனா வலியுறுத்தியுள்ளது.
சீனத் தூதுவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த புதன்கிழமை கூடிய அமைச்சரவையில், சீனாவினால் பெரும் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வந்த துறைமுக நகரத் திட்டத்தை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, இலங்கை அமைச்சரவையின் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் இலங்கை அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் துறைமுக நகர் திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
தொடர்புடைய செய்தி- கொழும்பு போட் சிற்றி நிர்மாணப் பணிகளை சீனா இடைநிறுத்தியது
