நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் யோசனை ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ளது. புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என சுதந்திரக் கட்சி யோசனை முன்வைத்துள்ளது.
நாடாளுமன்றம் தற்போது 225 பிரதிநிதிகளை கொண்டுள்ளது இதனை 235 ஆக அதிகரிக்க வேண்டும்.வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போதைய வாக்காளர் எண்ணிக்கையை விட அரைவாசியாக குறைந்து காணப்பட்ட காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தனர்.
இதனால், உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய உயர்த்தப்பட வேண்டும்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வதை மக்கள் எதிர்க்கவில்லை. அமைச்சர்களின் எண்ணிக்கை உயர்வதையே மக்கள் எதிர்ப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
