பாராளுமன்றத்தை கலைக்குமாறு மஹிந்தவின் ஆதரவாளர்கள் கோரிக்கை!

பாராளுமன்றத்தை கலைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்த்து பாராளுமன்றத்தை கலைக்காத பட்சத்தில் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக மகிந்த ஆதரவாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை மீண்டும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து நல்லாட்சியில் ஊழலை புகுத்தும் நோக்கில் மகிந்த ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோரி வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் அமைப்பு என புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன் பில தெரிவித்துள்ளார்.

இவ் அமைப்பில் பொது மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, புதிய இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளன.

பாராளுமன்றத்தை எதிர்வரும் 23ம் திகதி கலைக்காவிட்டால் வீதியில் இறங்கி நடத்தப்படும் போராட்டங்களில் பாரியளவிலான மக்களும் பங்குகொள்ளுவார்கள் என மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -