ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படுமா!

ரம் ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்ப பாடசாலை மாணவர்கள் விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டாமைக்கு, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முக்கிய ஏதுவாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் குறித்த பரீட்சையை ரத்து செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தற்போது 40 லட்சம் பாடசாலை மாணவா்களில் ஆறு லட்சம் மாணவர்கள் மட்டுமே விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தரம் ஒன்று முதல் மாணவர்களை வெறும் புத்தகக் கல்வியில் மட்டும் பெற்றோர் ஈடுபடுத்துவதாகவும், போட்டிப் பரீட்சைகளில் சித்தியை இலக்காகக் கொண்டு இவ்வாறு செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தரம் ஒன்று முதல் மூன்று வரையிலான மாணவ, மாணவியரை விளையாட்டுக்களில் ஊக்குவிக்கும் நோக்கில், சிறுவர் மெய்வல்லுனர் போட்டிகளை இரண்டாம் தவணையில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சிங்கள ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -