எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-
நீண்ட காலமாக பப்ரல் அமைப்பின் சார்பில் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் சேவோ அமைப்பின் கல்முனை தலைமைக் காரியாலயத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டவர்களுடனான சந்திப்பும் அது தொடர்பான மீளாய்வுக் கூட்டமும் சேவோ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் தலைமையில் 2015-03-08 ல் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பப்ரல் அமைப்பின் திட்ட பணிப்பாளர் எஸ்.சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டவர்களுடனான சந்திப்பில், மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்னும் வினைத்திறன் மிக்கதாக, பப்ரல் அமைப்பின் செயற்பாடுகளை செய்வது போன்ற விடயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்வுகளும் எட்டப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)