ஸ்ரீலங்கா சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!

நிஸ்மி-
ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுற்றுலா கைத் தொழில் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் கடந்த (08.03.2015) ஞாயிற்றுக்கிழமை பொத்துவில் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா சுற்றுலா கைத் தொழில் சம்மேளனத் தலைவர் ஏ.எம்.ஜஹ்பர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.வாஸீத், அக்கரைப்பற்று, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ்; அத்தியட்சகர் டீ.ஆர்.டீ.ஹேமந்த திக்கோவிற்ற, பொத்துவில் விசேட அதிரடிப் படை உதவிப் பொலிஸ்; அத்தியட்சகர் ஜே.ஆர்.சேனாதீர, விசேட அதிரடிப் படை முகாம் பொறுப்பதிகாரி லால் ஜெயதிலக்க, மாவட்ட வைத்திய அதிகாரி ஐ.எம்.இஸ்ஸதீன், பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோக்தர் மற்றும் சமுக சேவையாளர்கள் ஏராளமான முஸ்லிம், தமிழ், சிங்கள மாதர்களும் கலந்து கொண்டனர்

ஸ்ரீலங்கா சுற்றுலா கைத் தொழில் சம்மேளனத் தலைவர் ஏ.எம்.ஜஹ்பர் அவர்களின் தலைமை உரையைத் தொடாந்து பெண்கள் பாதுகாப்பாக வாழும் சிறந்த சூழழை ஏற்படுத்துவோம் என்ற தொனிப் பொருளில் உதவிப் பொலிஸ்; அத்தியட்சகர் டீ.ஆர்.டீ.ஹேமந்த திக்கோவிற்ற, பொத்துவில் வைத்திய சாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி ஐ.எம்.இஸ்ஸதீன் ஆகியோர் சிறப்புச் சொற் பொழிவாற்றினார்கள்.

சிறப்பு நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

சிறந்த மகளிர் சேவையாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டு பொன்னாடை போர்த்தி, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்ட பெண் பொலிஸ் பரிசோதகர்கள், பெண் தாதி உத்தியோகத்ர்கள், பிரதேச செயலக உத்தியோக்தர் மற்றும் சமுக சேவையாளர் ஆகியோர்களையும் படங்களில் காணலாம்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -