இன்றுள்ள பாடங்களும் இனியுள்ள கடமைகளும் எனும் கருப்பொருளுடன் ஜமாத் இஸ்லாமியின் இஜ்திமா…





ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் -

இலங்கை ஜமாத் இஸ்லாமின் ஓட்டமாவடி மன்றத்தினால் இன்றுள்ள பாடங்களும் இனியுள்ள கடமைகளும் எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்கள், பெண்களுக்கான இஜ்திமா நேற்று சனிக்கிழமை (20.02.2015) ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலிலும், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகாவித்தியாலைய பெண்கள் பாடசாலையின் கேட்போர் கூடத்திலும் இடம்பெற்றது.

மெளலவி ஏ.பி.சீ.முஸ்தபா (இஸ்லாஹி/ நாசிம் மட்டக்கலப்பு மாவட்டம்) தலைமையில் இடம்பெற்ற இவ் இஜ்திமாவானது இரண்டு கட்டங்களாக மாலை 4மணி தொடக்கம் 6மணி வரை பெண்களுக்காகவும், 4.30 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை ஆண்களுக்காகவும் இடம் பெற்றதுடன் பெண்களுக்கான அமர்வில் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிகழ்வில் கருப்பொருள் உரையினை இலங்கை ஜமாத் இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் நிகழ்த்தினார் மெளலவி ஆர்.இப்றாஹிம் உலகம் ஒரு செயற்களம் எனும் தலைப்பிலும், அஸ்ஸெஹ் எம்.எஃப்.எம்.ஹுசைன் (நளீமி/ MA சூடான்) செயற்களத்தில் எம் முன்னோர்கள் எனும் தலைப்பிலும் சொற்பொழிவாற்றியதுடன் பெண்களுக்காக அமர்வில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நஜீப்கான் (எம்.பி.பி.எஸ்) அவர்களினால் பிரதேசத்தில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தினால் ஏற்படும் அபாயங்களை பற்றியும், வீட்டுச் சூழலை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க இஸ்லாம் எதைச் சொல்கின்றது என்ற கருப்பொருளில் உரையாற்றினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -