உயர்கல்வி அமைச்சராக ராஜீவ விஜேசிங்க நியமிக்கப்படலாம் என தற்போதைய உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.உயர்கல்வி ராஜாங்க அமைச்சராக ராஜீவ விஜேசிங்க கடமையாற்றி வருகின்றார்.
அமைச்சரவை அந்தஸ்துடைய உயர்கல்வி அமைச்சுப் பொறுப்பு ராஜீவவிற்கு வழங்கப்பட உள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. அமைச்சர்களை நியமிப்பது நீக்குவது தொடர்பிலான அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு.
ஜனாதிபதி அவ்வாறான தீர்மானம் எடுத்தால் அதனை மதித்து அதிகாரத்தை ஒப்படைக்கத் தயார் என கபீர் ஹாசீம் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
தலையீடுகள் இன்றி கடமைகளை செய்ய சந்தர்ப்பம் இருக்க வேண்டும்: ரஜீவ விஜேசிங்க தலையீடுகள் இன்றி கடமைகளைச் செய்ய சந்தர்ப்பம் இருக்க வேண்டுமென உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பணி நீக்கம் செய்யப்பட்டால் கிரமமான முறையில் விசாரணை நடத்தி அதன் பின்னரே, பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அரசியல் ரீதியான காரணிகளுக்காக இவ்வாறு பணி நீக்கம் செய்யப்படக் கூடாது. எவ்வித தலையீடுகளும் இன்றி கடமைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட வேண்டும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் அது குறித்து அறிக்கப்பட வேண்டும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு நான் உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹாசிமிடம் கோரினேன்.
இது குறித்து ஜனாதிபதிக்கும் அறிவித்துள்ளேன். உரிய நடவடிக்கைகள் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளேன்.
உரிய விசாரணைகளின் பின்னர் நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியும் ராஜீவ விஜேசிங்க கண்டியில் நேற்று தெரிவித்துள்ளார்.
pt
