இர்ஸாத் ஜமால்தீன்-
அல்-கிம்மா நிறுவனத்தினால் பொத்துவில் மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது அல்-கிம்மா தொண்டு நிறுவனத்தின் வறுமையில் வாழும் மக்களுக்கான இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தில் பொத்துவில் மக்களும் பயனடையும் வகையில் பிரதேச மூவினத்தைச் சார்ந்த வறிய 100 குடும்பங்களுக்கு இலவச நீர் இணைப்பு நேற்று (16) வழங்கி வைக்கப்பட்டது.
வழங்கபடும் 100 இலவச குடிநீர் இணைப்பினை விஸ்தரித்து எதிர்வரும் மார்ச் மாதமலவில் சுமார் 500 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டு வருவதாகவும் அல் கிம்மா நிறுவனத்தின் பொத்துவில் தொகுதி இணைப்பாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ் முபாறக்க ஆசிரியர் தெரிவித்தார்.
இந் நிகழ்வு பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ் அப்துல் வாசித் அவர்களின் தலைமையில் சபை கூட்ட மண்டபத்தில் நடை பெற்றது. இவ் வைபவத்தில் அல்-கிம்மா நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஜே ஜபீர், நிறுவனத்தின் பொத்துவில் இணைப்பாளர் பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ் முபாறக் ஆசிரிசயர் அவர்களும் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)