கல்குடாவின் புதுமுக வேட்பாளர் என பேசப்பட்டும் கணக்கறிஞர் றியால் MBA (UK), ACA, ACMA சிங்கப்பூர் பயணம்!

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-

ன்மைக்காலமாக கல்குடா பிரதேசத்தில் புதிய அரசியல் மாற்றத்தினை மையமாக வைத்து புதுமுகங்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் களமிறக்கப்படவுள்ளதாக பேசப்படுபவர்களில் மிக முக்கியமான ஒருவராக பேசப்படும் பட்டயக் கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியால் உலக தானிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் பயணமாகவுள்ளார்.

மேலும் நாட்டில் முக்கிய நிறுவனமாக கருதப்படுகின்ற செரண்டிப் நிறுவனத்தில் பணிப்பாளராகவும், அதன் பிரதம நிதி அதிகாரியுமாக பணியாற்றுகின்ற இவர், உலக தானிய அமைப்பின் தெற்காசிய மாநாட்டில் உரை நிகழ்த்துவதற்காக அவ்வமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார். 

இம் மாநாடானது சிங்கப்பூரில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற சங்கிரில்லா நட்சத்திர மாநாட்டு விடுதியில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. இதில் உலகில் முக்கிய தானிய உற்பத்தி நாடுகளாக கருதப்படும் நாடுகளில் உள்ள முக்கிய வியாபார நிறுவனங்களின் பிரதி நிதிகள் கலந்து கொள்ள உள்ளமை உலகளவில் வியாபார துறையில் பேசப்படும் விடயமாக காணப்படுகின்றது.

கடந்த ஆண்டு மேற்படி மாநாட்டில் கணக்காளர் எச்.எம்.எம்.றியால் பங்கு பற்றியதன் விளைவாக பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்கள் மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாட்டு பிரதிநிதிகளிடம் வரவேற்பு பெற்றதன் காரணமாகவே இம்முறை மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவினர் மாநாட்டின் ஓர் அமர்வில் தலைமைப் பொறுப்பினை ஏற்று நடாத்துமாறு கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இவ்வாறு உலக வியாபார நிறுவனங்களுக்கிடையில் தனது பெயர் பேசப்படும் வகையில் கால் பதித்துள்ள பட்டயக் கணக்கறிஞர் றியால்., கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள மீராவோடை கிராமத்தை பிறப்பிடமாக கொண்டும், அதே கிராமத்தில் உள்ள அல்-ஹிதாய பாடாசலையில் தனது ஆரம் கல்வியினை ஆரம்பித்து பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியில் பூர்த்தி செய்தார். அதற்கு பிற்பாடு கணக்கியல் துறையில் பட்டயக் கணக்கறிஞராகவும், அதே துறையில் MBA(UK), ACA, ACMA போன்ற பட்டங்களையும் பூர்த்தி செய்துள்ளமையானது தான் பிறந்த பிரதேசத்துக்கும், சமூகத்துக்கும் பெருமை சேர்க்கின்ற விடயமாகவே எல்லோராலும் பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -