இனியபாரதியின் கொடூரங்கள் அம்பலம்: திருக்கோவிலில் மக்கள் அழுகையுடன் ஆர்ப்பாட்டம்!

ஏ.எல்.றமீஸ்-

ம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி திருக்கோவிலி;ல் அம்பாரை மாவட்ட தமிழ் பிரதேச மக்கள் இன்று 18ம் திகதி புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை காணமல் போனோரின் உறவினர்களின் சார்பில் அம்பாரை மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன் ஆகியோரின் ஏற்பாட்டில் இவ் ஆர்ப்பாட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை கட்டத் தொகுதிக்கு முன்பாக இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கடந்த யுத்த காலத்திலும் அதன் பின்னரும் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட நுற்றுக்கணக்கான தமது உறவுகளை மிட்டுத்தருமாறும்,நீதி வழங்குமாறும் கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் துயரம் தாளாது கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் சார்பாக அம்பாரை மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவில் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.கேமந்த டிக்கோவிட்ட இடம் மகஜரை கையளித்தார்.

இம் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மட்டக்களப்பு பிரதேசத்தில் பிறந்தவரும் தற்போத திருக்கோவில் வசிப்பவரும் முன்னால் ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளரும்,கிழக்க மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார் என்னும் இனியபாரதி என்பவர் கடந்த காலங்களில் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தில் அம்பாரை மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்த காலத்திலும் பின்னர் முன்னால் ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளராக இருந்த காலத்திலும் விசாரணைக்கு என கடத்திச் செல்லப்பட்ட மற்றும் கடத்திச் செல்லப்பட்ட எங்களது உறவுகளை மீட்டுத்தருமாறும் 

அவரால் பலாத்காரமாக ஏழை பொத மக்களிடம் இரந்து அபகரிக்கப்பட்ட உடமைகள் சொத்துக்களை மிட்டுத்தருமாறும் அவர் இருந்த காரியாலயம் அமைந்துள்ள வளாகத்தில் கொன்று புதைக்கப்பட்டவர்களின் ஏச்சங்களையும் அங்கு புதைக்கப்பட்டு ஆயுதங்களையும் தோண்டி எடுத்து நீதி விசாரனைகள் நடத்துமாறும்

தற்போது அவர் வசிக்கின்ற திருக்கோவில் தம்பிலவில் மத்திய சந்தைக்கு அருகில் இருக்கின்ற வீட்டில் பதுங்கு குழியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் நகைகளை பற்றிய விசாரனைகளை நடத்துமாறு என மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆரம்ப கட்ட போராட்டமாக இருப்பதுடன் தொடர்ந்த நீதி கிடைக்கம் வரை எமது போராட்டம் தொடருமென அம்பாரை மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இறுதியில் ஆர்ப்பாட்டகாரர்கள் மாகாணசபை உறுப்பினர் இனிய பாரதியின் வீட்டை முற்றுகையீட்டு கோசம் எழுப்பினர்.

இது எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு வாக்குகள் சேகரிப்பதற்காகவே இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளப்பட வைக்கப்படுகின்றனர் என்று இனிய பாரதி அவர்கள் தெரிவித்தார். 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -