ஓட்டமாவடி,அஹமட் இர்ஸாட் -
ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் 1995ம் ஆண்டு சாதாரணதரத்தில் கல்விகற்ற நண்பர்கள் வட்டத்தினால் (FSIA) ஒழுங்கு செய்யப்பட்டு DR.முஸ்தபாவின் தலைமையில் நேற்று செவ்வாய் கிழமை (17.02.2015) ஓட்டமாவடி,காவத்தமுனை பொது செளக்கிய மருத்துவ நிலையத்தில் முற்றிலும் இலவசமான முறையில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு அதற்கு தேவையான சகலவகையான மருந்து வகைகளும் வழங்கிவைக்கப்பட்டது.
இதற்கான பூரண அனுசரனையினை குவைத் நாட்டின் இலங்கை தூதுவராலையத்தில் செயலாளராக கடமையாற்றும் என்.எம்.அனஸினால் வழங்கப்பட்டதோடு, வருகை தந்திருந்த 600க்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்த மாஞ்சோலை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய பொறுப்பதிகாரி எச்.எம்..எம்.முஸ்தபா (எம்.பி.பி.எஸ்), வாழைச்சேனை வைத்தியசாலை கடமையாற்றும் ஏ.யூ.என்.ஏ.கலாம் (எம்.பி.பி.எஸ்) ஆகியோர்களுடன் ஏனைய வைத்தியர்களாக ஜனாப் நியாஸ் (எம்.பி.பி.எஸ்) வாழைச்சேனை வைத்தியசாலை, திரு.திசாநாயக்கா (எம்.டீ) சுகாதார வைத்திய அதிகாரி வாழைச்சேனை, எஸ்.ரி.எம்.நஜீப்கான் (எம்.பி.பி.எஸ்) சுகாதார வைத்திய அதிகாரி ஓட்டமவாடி ஆகிய வைத்தியர்களும் வருகை தந்திருந்ததோடு, கண் குறைபாடுள்ளவர்களுக்கும் மேலதீகமான முறையில் சிகிச்சிசை அளிக்கப்பட்டமை முக்கிய விடயமாகும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)