வளர்பிறையின் அதிரடிக்கு ஈடுகொடுக்கத் தவரிய அல்-அக்ஸா…






ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-

மாவடிச்சேனை அல்-இக்றாஹ் விளையாட்டுக் கழகத்தின் இருபதாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பதினாறு விளையாட்டுக் கழகங்களை கொண்டு நடாத்தப்பட்ட அணிக்கு 20 ஓவர்கள் கொண்ட கடினபந்து சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டுக் கழகமானது ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகத்தின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் இவ்வருடத்துக்கான இக்றாஹ் T20 கின்னத்தினை (ICCT20) வளர்பிறை அணியிடம் இழந்தது.

நேற்று செவ்வாய் கிழமை (17.02.2015) மாலை ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இவ்விறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டுக் கழகம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றதுடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகம் ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தியதனால் அல்-அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் பந்து வீச்சாளர்கள் துவம்சம் செய்யப்பட்டனர். ஒரு கட்டத்தில் விக்கட் இழப்பின்றி ஒன்பது ஓவர்கள் நிறைவில் 90 ஓட்டங்களைப் பெற்றிருந்த வளர்பிறை விளையாட்டுக் கழகம் இறுதியில் 18.4 ஓவர்களில் 7 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று வெற்றி வாகையை சூடிக்கொண்டது. இவ்வாறு அன்மைக்காலமாக தொடர்ந்தேர்ச்சியாக சகல கிறிக்கட் தொடர்களிலும் வெற்றிவாக சூடிவரும் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகமானது கல்குடா பிரதேசத்தில் எந்த கழகத்தினாலும் முறியடிக்கமுடியாத இருபதுக்கு இருபது கிறிக்கட ஜாம்பவானாக திகழ்வதினை காணக்கூடியதாக இருப்பதானது முக்கிய விடயமாகும்.

மேலும் இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சருமான அல்-ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டதுடன், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ. அஸ்மி , ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பனிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலளர் ஜனாப்.அக்பர் ஆகியோர் விசேட அதீதிகளாக கலந்து கொண்டு இரு அணிகளுக்குமான பணப்பரிசில்களையும் வெற்றிக் கின்னங்களையும் வழங்கி வைத்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -