அமைச்சர் றிஷாதிற்காகவே முசலி மக்கள்...

முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-

ண்மையில், கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் றிஷாத் பதியுதீன் அவர்களது முசலி கிராம மக்களுடனனான சிநேகபூர்வ கலந்துரையாடலானது,மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் இரவு 8.00 மணியளவில் நடைபெற்றது. 

இக்கூட்டமானது அபிவிருத்தி அலுவலர் முஹம்மட் பழீல் இம்தியாஸ் தலைமையில் முசலிக் கிராமத்தின் 100 வீதமான மக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் கௌரவ அமைச்சர் அவர்களது அன்புக்குக்குரிய ஆதரவாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கூட்டத்தில் முசலிக் கிராமத்தின் தேவைகள் தொடர்பாகவும் அமைச்சரினால் இக்கிராமத்திற்கு ஆற்றப்படவேண்டிய சேவை தொடர்பாகவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

அக்கோரிக்கைகளில் சிலவற்றை உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கும், ஏனையவற்றை விரைவில் செய்வதற்கும் அமைச்சர் அவர்கள் துரித நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்;. முசலிக்கடலில் மூழ்கி முதல் முத்தை பாராளுமன்றத்திற்கு அனுப்பியவரும் அமைச்சரல்லவா இவரோடு நாம் என்றும் பலமாக இருப்போம் என முசலி மக்கள் திடசங்கட்பம் எடுத்துள்ளதை அறிய முடிகிறது.

வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,அமைச்சரின் இணைப்புச்செயலாளர் அலிகான் சரீப்,வடமாகாண ஆளுனரின் முன்னாள் இணைப்பாளர் லியாவுதீன்,போன்றோரும் கலந்து சிறப்பித்தனர்.

இக்கிராமத்திற்கு ஒரு சிறப்புத்தன்மை உள்ளது.
அதாவது வன்னிப்பாராளுமன்ற உறுப்பினரும்,முந்நாள் பிரதியமைச்சருமான சுமதிபால அவர்களின் இணைப்புச்செயலாளராக எமது அமைச்சர் செயற்பட்ட அக்காலத்தில் இவ்வூர் மக்கள் முழு ஆதரவையும் தெரிவித்தமையை மறக்கமுடியாது.தன்னால் இயன்ற உதவிகளை இக்கிராமத்திற்கு றிசாத் பதியுதீன் அப்போதே பெற்றுக்கொடுத்துள்ளார். 

அக்காலத்தில் கண்டக்குழி முசலிக்கிராமத்தை ஏனையோர் சுமதிபால முகாம் என அழைத்ததை மறுக்கமுடியாது.அன்று தொடக்கம் இன்றுவரை அமைச்சருடனான இவ்வுறவு சிறப்பாகச் செயற்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -