நல்­லாட்சி தொடர்­பாக பேசி­யிருந்தால் நாங்களும் கடத்தப்பட்டிருப்போம்- அமைச்சர் கரு ஜய­சூ­ரிய

ல்­லாட்சி தொடர்­பாக பேசி­யி­ருப்­போ­மா­க­வி­ருந்தால் தாக்­கப்­பட்டு வெள்ளைவானில் கடத்­தப்­பட்­டிருப் போம்.அவ்­வா­றான நிலை­மை­யொன்றே கடந்த மூன்று வரு­டங்­களில் காணப்­பட்­டது என பொது­நி­ரு­வாகம், நல்­லாட்சி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்­துள்ளார்.

முன்­ன­தாக ஓய்­வு­பெற்ற பொலிஸ்மா அதிபர் பிர­திப்­பொ­லிஸ்மா அதி­பரின் அதி­கா­ரங்­க­ளையும் மீறி குற்­ற­மி­ழைத்­த­வர்­களை வௌ்ளைவான்­களில் கடத்­து­வ­தற்கும் சிறை­களில் அடைப்­ப­தற்கும் உத்­த­ர­விட்ட சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. அவ்­வாறு எம்மால் செயற்­ப­ட­மு­டி­யாது. தற்­போது நாம் மிக­மெ­து­வாக செயற்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்டை முன்­வைப்­ப­வர்கள் அதனைப் புரிந்து கொள்­ள­வேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.

வறுமை நிலை­யத்தின் ஏற்­பாட்டில் குடி­மக்கள் மதிப்­பீட்டை அட்டை வௌியிடும் நிகழ்வு நேற்று ஜெய்­ஹில்டன் விடு­தியில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தற்­போது நல்­லாட்சி தொடர்பில் அனை­வரும் பேசு­கின்­றார்கள். வீதி­யோ­ரங்கள் முதல் மருத்­து­வ­ம­னை­வரை இவ்­வி­டயம் குறித்து அவ­தா­னித்து வரு­கின்­றார்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்­டு­களில் நல்­லாட்சி தொடர்­பாக நாம் பேசி­யி­ருப்­போ­மா­க­வி­ருந்தால் தாக்­கப்­பட்­டி­ருப்போம். வௌ்ளைவானில் கடத்­தப்­பட்­டி­ருப்போம். அவ்­வா­றான ஒரு நெருக்­க­டி­யான நிலை­மையே காணப்­பட்­டது. ஆனால் இன்று அந்­நி­லை­மை­யா­னது முற்­றாக மாறி­யுள்­ளது.

குறிப்­பாக மாது­லு­வாவே சோபித தேரர் அவர்­களின் 75ஆவது பிறந்த தினத்­தின்­போது உரை­யாற்­றி­யவர் இந்த நாட்டில் நல்­லாட்­சி­யொன்று உரு­வெ­டுப்­ப­தற்கு தனது எதிர்­கா­லத்தை அர்ப்­ப­ணிக்­க­வுள்­ள­தாக குறிப்­பிட்டார். அன்று முதல் நாம் அனை­வரும் நல்­லாட்சி நோக்­கிய பய­ணத்தை படிப்­ப­டி­யாக ஆரம்­பித்தோம்.

இந்­நி­லையில் புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­சி­றி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நூறுநாள் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். எமது நிகழ்ச்­சி­நி­ரலின் பிர­காரம் செயற்­ப­டு­வதில் சில தாமங்கள் காணப்­ப­டு­கின்­றன. நல்­லாட்­சியை உறு­திப்­ப­டுத்­து­வற்­காக சட்டம் ஒழுங்­கினை பின்­பற்­றியே செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யுள்­ளது. அதன் கார­ண­மா­கவே இவ்­வா­றான தாமங்கள் ஏற்­ப­டு­கின்­றன. தற்­போது 45 தினங்கள் நிறை­வ­டைந்­துள்­ளன. இன்­னமும் 55 தினங்கள் காணப்­ப­டு­கின்­றன. குறித்த காலப் பகு­தியில் எமது செயற்­திட்­டத்­தினை முழு­மை­யாக செயற்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

கடந்த காலத்தில் ஓய்­வு­பெற்ற பொலிஸ்மா அதிபர், பிர­திப்­பொ­லிஸ்மா அதி­பரின் அதி­கா­ரங்­க­ளையும் கடந்து குற்­ற­மி­ழைத்­த­வர்­களை வௌ்ளைவான்­களில் கடத்­து­வ­தற்கும் சிறை­களில் அடைத்து தண்­டனை வழங்­கு­வ­தற்கும் உத்­த­ர­விட்ட சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. அவ்­வா­றான செயற்­பா­டு­களை எம்மால் மேற்­கொள்ள முடி­யாது என்­பதை மிக மெது­வாக செயற்­ப­டு­வ­தாக எம்­மீது குற்­றச்­சாட்டை முன்­வைப்­ப­வர்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

பொலிஸஸ் சேவையில் பாரிய அர­சியல் தலை­யீ­டுகள் காணப்­பட்­டன. பொலிஸார் தமது பத­வி­களை உயர்த்­திக்­கொள்­வ­தற்கும், தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்கும், இட­மாற்­றங்­க­ளைப்­பெற்­றுக்­கொள்­வ­தற்­கு­மாக அர­சி­யல்­வா­தி­களின் பின்னால் சென்ற துரதிஷ்டவசமான நிலைமை காணப்பட்டடிருந்தது. இவ்வாற துரதிஷ்டமான விடயங்கள் தொடர்வதற்கு தொடர்ந்தும் இடமளிக்கமுடியாது. 17ஆவது திருத்தச்சட்டம் மீளவும் நடைமுறைப்படுத்தப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படும். அதுமட்டுமன்றி நாம் வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு நல்லாட்சி உறுதிப்படுத்தப்படும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -