பிரதியமைச்சர் அமீர் அலிக்கு எதிரான மனு சுசில் பிரேமஜயந்தவினால் வாபஸ்!

பிரதியமைச்சர் அமீர் அலி கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டதாக பொதுஜன ஜக்கிய முன்னணியின் பொதுச் செயளாளரான சுசில் பிரேமஜயந்தவினால் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதம் சிரேஸ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா உயர்நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவையடுத்து வாபஸ் பெறப்பட்டது 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்ததால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் வீடமைப்பு சமுர்த்தி அமைச்சின் பிரதி அமைச்சருமான அமீர்அலி சியாப்டீன் பொதுஜன ஜக்கிய முன்னணி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக பொதுஜன ஜக்கிய முன்னணியின் பொதுச் செயளாளரான சுசில் பிரேமஜயந்தவினால் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதம் சிரேஸ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவையடுத்து வாபஸ் பெறப்பட்டது.

2014ம் ஆண்டு மார்கழி மாதம் 26ம் திகதி பொதுஜன ஜக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேமஜயந்தவினால் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து பிரதி அமைச்சர் அமீர் அலி நீக்கப்பட்டதாக கடிதமூலம் அறிவிக்கப்பட்டதையடுத்து சுசில் பிரேமஜயந்த, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுச் செயளாளர், தேர்தல் ஆணையாளர், பாராளுமன்ற செயளாளர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டு உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில் மனுதாரராகிய அமீர்அலி சியாப்டீன் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்புரிமை அங்கத்தவரேயன்றி பொதுஜன ஜக்கிய முன்னணியின் அங்கத்தவரல்ல என மனுவில் குறிப்பிட்டதுடன், பொதுஜன ஜக்கிய முன்னணிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மனுவின் 6வது பிரதிவாதியான தேர்தல் ஆணையாளரினால் மனுதாரரான அமீர் அலி சியாப்டீன் பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானி அறிவித்தல அறிவிக்கப்பட்டதையடுத்து ;மூலம் பொதுஜன ஜக்கிய முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் இரு கட்சிகளினதும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஏனைய விடயங்கள் தொடர்பில் பொதுஜன ஜக்கிய முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறியதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஜனாதிபதித் தேர்தலிpல் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமைப்பீடம் முடிவெடுத்ததையடுத்து எதிர் மனுதாரர்கள் மனுதாரராகிய அமீர் அலி சியாப்டீனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது

இந்த மனு மீதான விசாரணையில் மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தனது வாதத்தை முன்வைத்த வேளையில்,

6ம் பிரதிவாதியான தேர்தல் ஆணையாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிடர் ஜெனரல் நெரின் புள்ளே தனது சமர்ப்பனத்தில்

2ம் எதிர் மனுதாரர்ரான ஜக்கிய முன்னணியின் பொதுச் செயளாளரான சுசில் பிரேமஜயந்த வீடமைப்பு சமுர்த்தி அமைச்சின் பிரதி அமைச்சருமான அமீர் அலி சியாப்டீனை பொதுஜன ஜக்கிய முன்னணி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டதாக 2015ம் ஆண்டு மார்கழி மாதம் 26ஆம் திகதி தேர்தல் ஆணையாளருக்கு கடிதமூலம் அனுப்பப்பட்ட பதவி நீக்க அறிவித்தலை மீளப் பெற்றதாக நீதிமன்றிற்கு தெரியப்படுத்தியதுடன் அந்த அறிவித்தல் கடிதத்தின் பிரதியையும் நீதிமன்றில் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து மனுதாரரின் சட்டத்தரணி மனுவை வாபஸ் பெற்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -