தமது பணிகளை எவராலும் ஈடுசெய்ய முடியாது- கோத்தபாய ராஜபக்ச

மது பணிகளை எவராலும் ஈடுசெய்ய முடியாது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்த செவ்வியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தாம் அரசியல்வாதி அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், அரச சேவையாளராகவே தாம் பணியாற்றியதாக கூறியுள்ளார். 

தமது கடும் உழைப்பு மற்றும் பணிகளை ஈடுசெய்ய எவராவது நினைத்தால் இது முடியாத காரியம் என்றும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தாம் மாலைதீவுக்கு சென்றதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிந்தது முதல் தாம் இலங்கையிலேயே தங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் வங்கிக் கணக்கில் தமது பெயரில் பெருந்தொகை பணம் இருந்ததாக அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளமையை கோத்தபாய மறுத்துள்ளார்.

புலனாய்வுத்துறையினரால் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவே கே.பி என்ற குமரன் பத்மநாதனை அரசாங்கம் வித்தியாசமான முறையில் நடத்தியதாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். அவரை, இராணுவ புலனாய்வின் கண்காணிப்பின்கீழ் நடமாடச் செய்வதன் மூலமே விடுதலைப்புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டுபிடிக்க முடியும் என்ற அடிப்படையிலேயே தமது செயற்பாடு இருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது சகோதரர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் தவறு செய்த அமைச்சர்களை உரிய நேரத்தில் தண்டிக்காமை காரணமாகவே, மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போனது என்ற கருத்தை கோத்தபாய ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும் அது தமது பணியல்ல என்று கூறியுள்ள அவர், தாம் தமது பணிகளை ஒழுங்காகவே மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை தாம் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் கோத்தபாய சிரித்துக் கொண்டே குறிப்பிட்டதாக ஆங்கில இதழ் கூறியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -