உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் கடந்த அரச காலத்தில் பாதுகாப்புப் பிரிவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கட்டடங்கள் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மாளிகைகளுக்கு அருகாமையில் இருந்து மூடப்பட்ட அரச மற்றும் தனியார் வங்கிகளின் கட்டடங்களும்கூட விடுவிக்கப்படவுள்ளன. அதியுச்ச பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், தசாப்த காலமாக மூடப்பட்டிருந்த கொழும்பு, கோட்டையின் ஜனாதிபதி மாவத்தை, பாரன் ஜெயதிலக மாவத்தை, டாம் வீதி என்பனவும் அண்மையில் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

