இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிறைச்சாலை பாதுகாவலர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இவ்வெற்றிடங்களில் தொண்ணூற்றைந்து வீதமானவை திறந்த பிரிவிலும் மிகுதி ஐந்து வீதம் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் சேவையிலிருக்கும் விண்ணப்பதாரிகளுக்கான எல்லைப் போட்டி பரீட்சை மூலமும் நிரப்பப்படும்.
விண்ணப்பதாரிகள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதிக்கு 18 வயதுக்கு குறையாதவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் க.பொ.த (சா/த) தர பரீட்சையில் சிங்களம்இ தமிழ் அல்லது ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட பாடங்களில் விசேட சித்தியுடன் ஆறு பாடங்களில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத வகையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமது விண்ணப்ப படிவங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதிக்கு முன்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இல 150 பேஸ்லைன் வீதி கொழும்பு 9 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கேட்கப்பட்டுள்ளனர்.
.jpg)