முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் முனைப்போடு, அவருக்கு ஆதரவு தேடி நடத்தப்படும் நுகேகொடைக் கூட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் சில சிறு பங்காளிக் கட்சிகள் ஏற்பாடு செய்திருக்கும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார, மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் பிரபல பாடகர் மதுமாத அரவிந்த ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் சில உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளதோடு, ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் இங்கு வருகை தந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத்சாலி இன்று முதல் அரசியலில் ஒரு நடமாடும் பிணம் என தூய்மையான ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
“மஹிந்தவுடன் இணைந்து நாட்டை வெற்றிகொள்ள நீங்கள் தயாரா?’ என்கிற தொனிப்பொருளில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் முனைப்போடு, அவருக்கு ஆதரவு தேடி நடத்தப்படும் நுகேகொடைக் கூட்டத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி கூட்டத்தில் குறைந்த பட்சம் 5000 பேராவது கலந்துகொள்ளும் பட்சத்தில் தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அஸாத்சாலி பகிரங்கமாக சவால் விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அஸாத்சாலியின் சவாலை முறியடிக்கும் விதத்தில் இன்று மக்கள் கூட்டம் மிகைத்திருப்பதிலேயே, உதய கம்மன்பில மேற்படி தெரிவித்தார்.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் சில சிறு பங்காளிக் கட்சிகள் ஏற்பாடு செய்திருக்கும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் பிரபல பாடகர் மதுமாத அரவிந்த ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் சில உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளதோடு, மக்கள் அலை என்கிற நிலைமை என்றில்லாவிடினும், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் இங்கு வருகை தந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
அப்பிரதேசத்தின் போக்குவரத்தும் ஸ்தம்பிதமாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
டெ.சி
live:-https://www.youtube.com/watch?v=x0z3DYeEkCM#t=3553
டெ.சி
live:-https://www.youtube.com/watch?v=x0z3DYeEkCM#t=3553




