தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மன்­னிப்புக் கோர வேண்டும் - டக்ளஸ்

மிழ் தேசிய கூட்­ட­மைப்பில் உள்­ள­வர்கள் ஆளுக்­கொரு கருத்­தையும் ஒன்­றுக்­கொன்று முர­ணாக பேசு­வ­தையும் ஒரு­வரே முன்­னொரு பேச்சும் பின்­னொரு பேச்சும் பேசு­வதால் கூட்­ட­மைப்­புக்­குள்­ளேயே முரண்­பா­டுகள் தோன்­றி­யுள்­ளன. ஆட்சி மாற்றம் நடந்து ஒரு மாதத்­தி­லேயே தாமே உரு­வாக்­கி­ய­தாக கூறும் அரசை தாமே பகை உணர்­வு­கொட்டி திட்டி தீர்க்­கி­றார்கள். இத்­த­கைய சூழலில் தமிழ்­பேசும் மக்­களை பிழை­யாக வழி­ந­டத்­தி­ய­மைக்­காக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் தமிழ் மக்­க­ளிடம் மன்­னிப்பு கோர வேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா தெரி­வித்தார்.

யாழ்.ஊடக அமை­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்:-

தற்­போது ஆட்சி அமைத்­துள்ள புதிய அர­சாங்­கத்­திற்கு தமிழ் மக்­களை வாக்­க­ளிக்க சொன்ன தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தற்­போது அர­சாங்­கத்­திற்கு மாறான கருத்­துக்­களைத் தெரி­வித்து வரு­கின்­றது.

தமிழ் மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஊட்டி வாக்­க­ளிக்க செய்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த விட­யத்தில் தமிழ் மக்­க­ளிடம் மன்­னிப்புக் கேட்க வேண்டும்.

எமது கட்­சி­யினைப் பொறுத்­த­வ­ரையில் நாம் நீண்ட கால அர­சியல் போரா­ளிகள். என­வேதான் மாற்­றத்­தினை விரும்பும் மக்­க­ளுக்கு மாற்றுத் தலை­மை­யினைக் கொடுப்போம் என்ற தொனிப்­பொ­ருளில் தமிழ் மக்­களின் விடி­வுக்­காக போராட முன்­வந்­துள்ளோம்.

எங்­க­ளுடன் கைகோர்ப்­ப­தற்கு பல முற்­போக்கு கட்­சிகள், பொது அமைப்­புக்கள் தயா­ராக உள்­ளன. அவர்­க­ளு­டைய விப­ரங்­களை தற்­போது வெளி­யி­டு­வது பொருத்­த­மா­ன­தாக இருக்­காது.

இதே­வேளை எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வீணைச்­சின்­னத்தில் போட்­டி­யிடப் போவ­தாக தெரி­வித்­துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா வலு­வான பொது கூட்­டணி ஒன்று இணை­யு­மாக இருந்தால் தமது முடிவு தொடர்பில் பரி­சீ­லிக்­கப்­படும் என்றும் தெரி­வித்­துள்ளார்.

இவ்­வி­டயம் சம்பந்­த­மாக முற்­போக்கு சக்­திகள், பொது அமைப்­புக்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ளது என்றும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

மேலும் கடந்த 1970 ஆண்டில் இருந்து இன்­று­வரை இங்கு நடை­பெற்ற அனைத்து அர­சியல் படு­கொலைச் சம்­ப­வங்கள் தொடர்பில் முழு­மை­யான விசா­ர­ணை­களை நடத்த வேண்டும். அதற்கு தேவை­யான அழுத்­தங்­களை வழங்­கு­வ­தற்கும் நாம் தயா­ராக உள்ளோம் என்றும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.கேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -