திஸ்ஸ அத்தநாயக்க மீதான விசாரணைகள் பூர்த்தி!

க்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீதான விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் போலி ஆவணங்களை தயாரித்ததாக திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளதாக காவல்துறை மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பாரிய ஊழல் மோசடிகள் நிதி மோசடிகள் தொடர்பிலான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் இன்று கொள்ளுப்பிட்டியில் நிறுவப்பட்ட விசேட பிரிவு, ஆரம்ப நிகழ்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -