முஸ்லிம் அரசியலும்-பதவிக்கான போராட்டங்களும்..!

ரசியல்,பொருளாதாரம்,கல்வி,நாகரீகம்,சித்தாந்தம் என்பவற்றை இவ் உலகிற்கு கற்றுக்கொடுத்த நாம், அதனை மற்றவர்களிடமிருந்து கற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது துரதிஷ்டவசமானதே. 

இந்நாட்டில் முஸ்லிம்களாகிய எமது உரிமைகளை வென்றெடுக்க முஸ்லிம் காங்கிரஸ் எனும் தாய்க்கட்சி உருவாக்கப்பட்டது.அதன் ஸ்தாபகத் தலைவரின் மரணத்தின்பின் பதவிப் போராட்டங்களால் பிராந்திய கட்சிகள் தோற்றம் பெற்றது.

தற்போதைய மு.கா இலும் சரி, அ.இ.ம.கா இலும் சரி, தே.கா இலும் சரி பதவிகளுக்கான போராட்டங்களே அதிகமாக உள்ளது. இம்முறை மத்திய அரசில் முழு அமைச்சு,பிரதி அமைச்சு, மாகாண சபையில் முதலமைச்சு, அமைச்சு பெற்றுக் கொள்வதில் பிரதேசவாதம் மிகவும் தெளிவாக சாயம் பூசப்பட்டது.

இது இவ்வாரிருக்க இவ் அமைச்சுகளுக்கான இணைப்பாளரகள் எனும் அந்தஸ்தை பெற மறைமுகமான வசைபாடல்கள்,பகிரங்கமான முகஸ்துதி போன்ற செயற்பாடுகளில் உள்ளூர் அரசியல்வாதிகள் விற்பன்னரகளாக திகழ்கின்றனர்.

சிறுபான்மை கட்சிகளில் த.தே.கூ மட்டுமே இன்றுவரை பூரணமாக, சலுகைகளுக்கு விலை போகாமல் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.தமிழ் மக்கள் யுத்தத்தில் சந்தித்த இழப்புக்கள ஏராளம். அதன் அரசியல் தலைமைகள் நினைத்திருந்தால் சலுகைகளுக்கு விலைபோய் சுகபோகங்களை அனுபவித்திருக்கலாம்.

இங்கு தான் நாம் பாடம் கற்க வேண்டும்.தேர்தலின் பின் உரிமைகளை பெறுவதில் த.தே.கூ கவனம் செலுத்தி அதில் வெற்றி பெற்றும் வருகின்றனர். 100 நாள் வேலைத்திட்டம் முடியும் முன்னரே வட மாகாணத்தில் இராணுவக்கட்டுப்பாட்டுல் இருந்த காணிகளை விடுவிக்கும் முயறசியில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

பத்திரிகைகளில் மட்டும் வீரவசனம் பேசும் எமது அரசியல் தலைவவர்கள் இந் 100 நாட்களுக்குள் என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறியே...

கிழக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட காணிகள், நகர அபிவிருத்தி என்ற போர்வையில் சுவீகரிக்கப்பட்ட நிலங்கள், வேளான்மை செய்ய தடுக்கப்பட்ட காணிகள், கரையோர நிருவாக மாவட்டக் கோரிக்கை, சுதந்திரமான மத உரிமை என்பவற்றை பெற வேண்டுமெனின் எதிர்வரும் தேர்தலில் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்புங்கள் எனும் கோசத்தை தற்போதைய பிரதிநிதிகள் முன்வைப்பது கேளிக்கையானது.

த.தே.கூ இனால் இந் 100 நாட்களினுள் சில அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க முடியுமெனின் ஏன் இவர்களால் முடியாது? குறிப்பாக மு.கா இனால் ஏன் முடியாது?  இங்கு அ.இ.ம.கா, தே.கா இனை விமர்சிக்க முடியாது.

ஏனெனில், இவர்கள் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. மு.காங்கிரஸே முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி, மு.கா மீதான விமர்சனம் கட்சியின் ஆரோக்கியத்திற்காகவும், நேர்த்திக்காகவும் இருக்கின்ற நிலையில் மு.கா எனும் பஸ்ஸில் பயணம் செய்யும் பாராளுமன்ற, மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் எனும் பிரயாணிகளை தெரிவு செய்வதில் எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

Mr.MA.Jeswath,
Uva Wellassa University.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -