ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் யுனிட் நடாத்திய ஊடகவியலாளர் மாநாடு!

அஸ்ரப் ஏ சமத்

ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் யுனிட் இன்று கொழும்பு ஹோட்டல் ரமதாவில் ஊடகவியலாயளர் மாநாடு

இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபாவை மீண்டும் ஜனாதிபதி மைத்திரி கொடுக்க இருக்கின்ற சுற்றாடல் அமைச்சையாவது பாரமெடுங்கள் என அவருக்கு ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் யுனிட் அழுத்தம் கொடுக்கின்றது.

கொழும்பு மாநகர சபை உறுப்பிணர் எம்.எம். மன்சில், குருநாகல் நகர சபை உறுப்பிணர் அப்துல். சத்தார் மற்றும் கொலாநவை நகர சபை உறுப்பிணரும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

ஊடகவியலாளர் - இந்த நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சயின் 140க்கும் மேற்பட்ட பிரதேச நகர சபை உறுப்பிணர் உள்ளனர், 3 பாராளுமன்ற உறுப்பணர் உள்ளனர். 

10 மாகாணசபை உறுப்பிணர் உள்ளனர். 10 சபைகளின் தலைவர்கள் உள்ளனர். ஆனால் எமது ஸ்ரீ.ல.சு.கட்சியின் முஸ்லீம் யுணிட் தலைவராக 2 வருடங்கள் பைசர் முஸ்தபா பதவி வகித்தவர் அவருக்கு இராஜாங்க அமைச்ச கொடுக்கப்பட்டது. அதனை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு கபிணட் அமைச்சராக அவரது நிறுவனங்கள் கெசட் பண்ணப்பட்டுள்ளது. அதல் இருந்தே அவர் இப் பதவியில் இருந்து வெளியேறினார். அண்மையில் சவுதி அரேபியாவுக்குச் சென்ற பிரதிநிதி வரிசையில் எமது முஸ்லீம் யுணிட் பிரநிதி செல்ல வில்லை. 

கடந்த காலங்களில் 90 வீதமான முஸ்லீம்கள் ஜனாதிபதி மைத்திரிக்கு வாக்களிக்கவே முடிபு செய்திருந்தனர். அதன் பின்னரே ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், மற்றும் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து சிறந்த அமைச்சுக்களை எடுத்துள்ளனர். தம்புல்லை பள்ளிவாசல் பிரச்சினை அமைச்சர் ரவுப் ஹக்கீமீன் நகர அபிவிருத்திக்குள் வருகின்றது. இவ்விடயம் சம்பந்தமாக அவர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

நாங்கள் இருதிவரை மகிந்த ராஜபக்சவுக்கே ஆதரவு தெரிவித்து வந்தோம். ஆனால் பிரதியமைச்சர் பைசர் தேர்தலுக்கு முன்பே அவர் மைத்திரியுடன் இணைந்து கொண்டவர்.

முஸ்லீம் யுணிட்டை அவரின் தலைமையிலும் கொண்டு செல்வதற்கு அவர் கட்டாயம் மீள இராஜங்க அமைச்சை பாரம் எடுத்து அதனுடாக சேவை செய்ய வேண்டும்.

ஊடகவியலாளர் - நீங்கள் ஏன் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு அமைச்சினை பெற்றுக் கொடுக்க இவ்வாறு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தவில்லை.

ஊடகவியலாளர் - முஸ்லீம்களுக்கு பொதுபலசேனாவில் அச்சுருத்தல் நடக்கும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் அதனை அன்று தடுத்து நிறுத்த வில்லை.

ஊடகவியலாளர் - இந்த ஊடகவியலாளர் மாநாட்டை பைசர் முஸ்தாபாவே வருவார் என நினைத்தோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -