முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த 58 லட்சம் வாக்குகள் அவருக்கு கிடைத்த தனிப்பட்ட விருப்பு வாக்குகள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நீங்களும் மகிந்தவின் 58 லட்சம் வாக்குகளுடன் 18 ஆம் திகதி நுகேகொடவிற்கு வாருங்கள் என அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு பெருமளவிலான வாக்குகள் கிடைப்பது வழமையானது.
மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளினால் அவரை கவர்ந்தவர்கள் இருக்கின்றனர். அந்த 58 லட்சம் வாக்குகள் அதற்காக அவருக்கு கிடைத்த வாக்குகள் அல்ல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தனது தந்தை மற்றும் எஸ்.டப்ளியூ. ஆர்.டி. பண்டாரநாயக்க ஆகியோர் இணைந்து கட்டியெழுப்பிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபடும் வகையில் மகிந்த ராஜபக்ச எப்போதும் செயற்பட மாட்டார் என்ற கடும் நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தவி
தவி
