ஜனாதிபதி மைத்திரியை தொடர்பு கொண்டார் பிரதமர் மோடி!

ந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினரை வரவேற்க இந்திய அரசும் மக்களும் ஆவலுடன் காத்திருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இலங்கையின் புதிய சனாதிபதியை கோலாகலமாக வரவேற்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்த இந்தியப் பிரதமர் மைத்திரிபால சிறிசேன அவர்களின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் இந்தியா - இலங்கை நல்லுறவுக்கு புதிய அனுகுமுறையாக அமையுமெனவும் குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று (13) காலை சனாதிபதி அவர்களுடன் தொலைபேசியில் உரையாடியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நடைபெறவிருக்கும் உலக கிண்ண போட்டியில் கலந்துகொள்கின்ற இலங்கை கிரிக்கட் அணிக்கு தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட இந்திய பிரதமர், 1996ஆம் ஆண்டு போன்று இம்முறையும் இலங்கை அணி உலக கிண்ணத்தை வெற்றிகொள்வதற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கட் அணிக்கு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அழைப்பை ஏற்று பெப்ரவரி மாதம் 15 முதல் 18 வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

இவ்விஜயத்தின்போது சனாதிபதி அவர்கள் இந்திய சனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களை சந்திப்பார். அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.

மேலும், சனாதிபதி அவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களையும் ஏனைய பிரபுக்களையும் சந்திக்கவுள்ளார்.

சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் புத்தகயா விஹாரையையும் திருப்பதி கோவிலையும் தரிசிப்பார்.

மைத்திரிபால சிறிசேன அவர்கள் சனாதிபதி பதவியை ஏற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -